கசப்பான உண்மை
இன்னும் 100 வருஷத்தில், என் 2100 வருடத்தில் நாம் இருக்க மாட்டோம். சில வருடம் கலித்து, நாம் கஷ்டப்பட்டு கட்டின வீட்டில், வாங்கின அப்பாட்மெண்டடில் , வேற யாரோ வாழ்ந்துக்கொண்டு இருப்பார்கள். ரொம்ப ஆசைப்பட்டு வாங்கன கார், பைக் நமக்கு தெரியாதவர்கள் ஓட்டிக்கொண்டு இருப்பார்கள் அல்லது அழிக்க பட்டிருக்கலாம் நாம் ஆசையுடன் போட்டு கொண்டிருந்த நகைகள், கடிகாரம் எல்லாம் உபயோகம் இல்லாமல் இருக்கலாம். நாம் இறந்த பிறகு, நம் வீட்டில் நாம் ஒரு புகைப்படமாக சில காலம் இருப்பீர்கள் . இன்றைய நாள்களில், நிறைய பேர் வீட்டில் புகைப்படம் வைப்பது இல்லை. அடுத்த அடுத்த வாரிசுக்கு நீங்க யார், உங்க பெயர் தெரியாது. வெகு சிலரே சில நிமிடங்கள் உங்களை பற்றிய எண்ணங்கள் மனதை ஆட்டும். அதுவும் சில காலம். பலர், உங்களை பற்றிய எண்ணத்தை விட அவரவர்களின் வேலைகளைப் பார்க்க வேண்டிய சூழ்நிலையில் அவசர அவசரமாக ஓடி கொண்டிருப்பார்கள். இதையெல்லாம் நீங்க யோசிச்சு பார்த்தீங்கள் என்றால் இப்பொழுது ரொம்ப பெரிய விஷயம் என மண்டையை குழப்பிக்கட்டு இருப்பது, அத்தியாவசியமாக இருக்காது....