appa

அப்பா என்ற வார்த்தைக்குத்தான் அகராதியில் எத்தனை அர்த்தங்கள்.
அப்பா என்றால் அறிவு, அப்பா என்றால் பரிவு.
அப்பா என்றால் அன்பு, அவரிடம் கண்டது பண்பு.

அப்பா என்றால் வீரம், என்றும் இருக்கும் தீரம்.
அப்பா என்றால் பாசம், அவரிடம் இருப்பது நேசம்.
அப்பா என்றால் நண்பன், என்றும் எனக்கு அன்பன்.
அப்பா என்றால் தைரியம், அவர் நெஞ்சில் காணும் வைரம்.

அப்பா என்றால் தத்துவம், அதுவே அவரின் மகத்துவம்.
அப்பா என்றால் புதுமை, அதுதான் அவரின் மகிமை.
அப்பா எனறால் காரியம், அதுவே அவரின் வீரியம்.
அப்பா எனறால் துடிப்பு, அதுவே அவரின் மதிப்பு.

அப்பா என்றால் விவேகம், அதுவே அவரின் நிதானம்.
அப்பா எனறால் முன்னேற்றம், அதுவே அவர் வாழ்வின் ஏற்றம்.
அப்பா நான் செய்த பாக்கியம். 
எல்லா தினமும் எனக்கு தந்தை தினம் தான்! என்? எனக்கு ஒரு  நல்வாழ்க்கையை தினமும் தந்ததினால்.

Comments

Popular posts from this blog

On Children - Khalil Gibran

Let it go by Balu

கசப்பான உண்மை